89393 77777 | 89393 88888
sriannapooraniannadhanam@gmail.com

காசியில் 108 சாதுக்களுக்கு அன்னதானம்


மாத்ரு தேவோ பவ...! பித்ரு தேவோ பவ...!


முன்னோர்கள் நினைவாக காசியில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது நம் இந்திய கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புத செயலாகும். முன்னோர்கள் நினைவாக காசியில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்வதற்கு இணை வேறு எதுவும் இல்லை.


காசியில் சாதுக்களை அன்னதானத்திற்கு அழைக்கும்பொழுது நம் முன்னோர்களே அவர்களின் ரூபத்தில் வந்து அன்னதானத்தில் கலந்துகொண்டு நமக்கு ஆசி வழங்குகின்றனர்.


காசியில் முன்னோர்களின் நினைவாக சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது நமது ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும். மேலும் காசியில் அன்னதானம் செய்வது நமக்கு மகத்தான புண்ணிய பலன் தருகின்றது. கல்விக்கு அதிதேவதையாக கலைமகளும், செல்வத்திற்கு அதிதேவதையாக திருமகளும் இருப்பதுபோல் அரும்பசியாற்றும் அன்னத்திற்கு அதிதேவதையாக இருக்கும் ஸ்ரீ அன்னபூரணிதேவி வாசம் செய்யும் காசியில் முன்னோர்கள் நினைவாக அன்னதானம் செய்வது முன்னோர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தி அவர்களின் ஆசியோடு நம் குலம் தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன் வாழ வழி வகை செய்யும். தாங்களும் சாதுக்களுக்கு அன்னதானமும், கங்கையில் தீர்த்த சிரார்த்தமும் மற்றும் கங்கையில் தீப வழிபாடும் செய்து முன்னோர்களின் முழுமையான ஆசி பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


காசியில் அன்னதானம் செய்வது நமது கடமை மட்டுமல்ல, அந்த ஈசனுக்கு நாம் பட்டிருக்கும் கடனும் கூட.


இந்த அன்னதான கடமையை நாம் செய்வதன்மூலம் சிவனுக்கு நாம்பட்டிருக்கும் கடனை தீர்க்கும் போது, சிவன் நம்மை மட்டுமல்ல, நம் சந்ததியையும் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழவைப்பார். காசியில் அன்னதானம் செய்வதால் நம் குடும்பம் பெறும் நன்மைகள் ஏராளம். புண்ணியத்தின் புதையல் அது.


''தானத்தில் சிறந்தது அன்னதானம்'' என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில் ''எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்கிறார்.


''நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்பொழுது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு கொடுத்தால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதால் கிடைக்கும் பலத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும்'' என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார். இதை நம் வாழ்க்கையில் நாம் அனுபவப்பூர்வமாகவே உணர முடியும். நாம் நம்மிடம் உள்ள பொருட்களை பிறருக்கு வழங்கும்பொழுது கிடைக்கும் நன்மைகளுக்கு அளவே இல்லை.


கல்விக்கு அதிதேவதையாக கலைமகளும், செல்வத்திற்கு அதிதேவதையாக திருமகளும் இருப்பதுபோல் அரும்பசியாற்றும் அன்னத்திற்கு அதிதேவதையாக இருக்கும் ஸ்ரீ அன்னபூரணிதேவி காசியில் வாசம் செய்கிறாள்.

மழைவளம் குன்றி மக்கள் பஞ்சத்தால் பரிதவித்த ஒரு காலகட்டத்தில் பார்வதி தேவியே அன்னப்பூரணி என்ற திருநாமத்துடன் காசிநகர் வந்து தன் தெய்வீக சங்கல்பத்தால் அன்ன மாளிகை எழுப்பி, தன்னிடமுள்ள அட்சய பாத்திரத்திலிருந்து அனைத்து உயிர்களுக்கும் அன்னமூட்டி அரும்பசியாற்றினாள். இச்சிறப்புமிக்க அன்னப்பூரணி தேவி வாசம் செய்யும் காசியில் முன்னோர்கள் நினைவாக அன்னதானம் செய்வது முன்னோர்களை திருப்திப்படுத்தும்.சிவமயம்
கலி (4984) சாலிவாகனம் (1805) சுபானுவில் ஆவணி மாதம் 18ம் தேதி ஆதித்ய மற்றும் பாண்டி நாட்டைச் சேர்ந்த நாட்டுக் கோட்டைச் செட்டி வைசிய நகரத்தார். ஸ்ரீ அயோத்தியா புரியில் ஸ்ரீராமபிரான் பிரதிஷ்டையும் அன்னதானச் சத்திரம் ஸ்தாபனமும் செய்யப் பெற்று நடந்து வருகிறது.


சுப மஸ்து-இங்கிலீஸ் 1883 செப்டம்பர் மாதம் 2ம் தேதி


ஒரு நூற்றாண்டு கடந்து அயோத்தி வாசலில் இருக்கும் இந்தக் கல்வெட்டு காலம் காலமாக அன்னதானத்தின் சாட்சியாக விளங்குகிறது.

நாம் காசியில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்வதால் சிவனின் மனம் குளிர்ந்து மாபெரும் புண்ணியம் நமக்கு கிடைக்கிறது. இந்த புண்ணிய பூமியில் அன்னமளிப்பவன் மாபெரும் செல்வந்தராக வாழ்வான். காசியில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்வதால் பொன், நிலம், வீடு, வாகனவசதி, திருமணம், புத்திரபாக்கியம், வியாபார சிக்கல்கள் தீர்ந்து வியாபாரம் செழித்தோங்கும். மேலும் அனைத்துவித தோஷங்களும் நீங்கும்எக்காரணம் கொண்டும் காசியில் முன்னோர்கள் நினைவாக 108 சாதுக்களுக்கு அன்னதானம் செய்வதை நாம் விட்டு விடக்கூடாது என்பதற்காகவே பித்ரு க்ஷேத்ரமாக விளங்கும் காசியில் இச்சிறப்புமிக்க அன்னதானம் செய்வதை ஒரு இறைபணியாகவே கருதி கடந்த 19 ஆண்டுகளாக அடியார்கள் விரும்பும் விசேஷ நாட்களில் ஸ்ரீ அன்னபூரணி அன்னதான சேவா டிரஸ்ட் தொடர்ந்து காசியில் அன்னதானம் செய்து வருகிறது.