89393 77777 | 89393 88888
sriannapooraniannadhanam@gmail.com

பித்ரு ஹோமம், தீர்த்த சிரார்த்தம், தீப வழிபாடு



நம்மை வாழ வைத்த தெய்வங்கள் நினைவாக கங்கை கரையில் பித்ரு ஹோமம்


அனைத்துவித தோஷங்களில் இருந்தும் விடுபட காசியில் பித்ரு ஹோமம் செய்வது அவசியம். மேலும், பித்ரு ஹோமத்தால் நம் குடும்பம் பெறும் நன்மைகள் ஏராளம். எவ்வித துன்பத்தையும் போக்கும் சக்தி காசியில் நடைபெறும் பித்ரு வழிபாட்டுக்கு மட்டுமே உண்டு. இன்றைய சூழ்நிலையில் எல்லோராலும் பித்ரு கே்ஷத்ரமாக விளங்கும் காசிக்கு நேரில் சென்று பித்ரு ஹோமம் செய்யமுடியாது என்பதால், தங்கள் சார்பாக கங்கை கரையில் பித்ரு ஹோமம் நடத்தப்படும்.



கங்கை கரையில் தலைமுறைகளை செழிக்க வைக்கும் தீர்த்த சிரார்த்தம் மற்றும் தீப வழிபாடு



இந்துக்களாகிய நாம் அனைவரும் காசியில் நம் முன்னோர்களின் நினைவாக கங்கையின் புனித நீர் கொண்டு தீர்த்த சிரார்த்தமும், பித்ருக்களை சாந்தபடுத்த அனைத்து தேவதைகளும் குடிகொண்டுள்ள கங்கையில் தீப வழிபாடும் அவசியம் செய்தாக வேண்டும். கங்கை கரையில் புனித கங்கை நீர் கொண்டு தீர்த்த சிரார்த்தம் செய்யும் போது கங்கை நீரில் உள்ள மூலக்கூறுகள் நமது முன்னோர்களை பற்றி நாம் சொல்லுகின்ற வார்த்தைகளை உள் வாங்கிக் கொண்டு நம் முன்னோர்களிடம் அதிர்வலைகளாக சென்றடைகிறது. அதை ஏற்றுக் கொண்டு நமது பித்ருக்கள் நமது மூன்று தலைமுறை பித்ருவர்க்கத்திற்கும், மூன்று தலைமுறை மாதாமஹவர்க்கத்திற்கும் நற்கதி கிடைக்க வழி வகை செய்கின்றனர். மேலும் முன்னோர்களின் உடல்கள் ஒளிமயமானவை எனவே தான் ஒளி சொரூபங்களாகவே அவர்களை போற்றி கங்கையில் தீப வழிபாடு செய்வதும் அவசியம்.



தாங்களும் கங்கை நதிகரையில் தீர்த்த சிரார்த்தமும், தீப வழிபாடும் செய்து முன்னோர்களின் முழுமையான ஆசி பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.